மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பேரணி
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் காங்கிரஸ் கட்சி நடத்திய விழிப்புணர்வு பேரணி.
அலங்காநல்லூரில் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்ட நடை பயணத்தின் முதலாம் ஆண்டு வெற்றி விழிப்புணர்வு பேரணி காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா' (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் மேற்கொண்ட நடைபயணத்தின் முதலாம் ஆண்டு வெற்றி விழிப்புணர்வு பேரணி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக் கடையிலிருந்து அம்பேத்கர் பேருந்து நிலையம் வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமையிலும், வட்டாரத் தலைவர் சுப்பாராயலு ஏற்பாட்டில் நடைபெற்றது.
நடைபயணத்தின் போது, ராகுல்காந்தி, சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி, வாழ்க வாழ்க என, கோஷம் போட்ட நிர்வாகிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்.
வரும் 2024- ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வருவார் என முழக்கமிட்டனர். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டது இந்த பாஜக அரசு. நீட் தேர்வு மாணவ மாணவிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆகையால், இந்த நீட் தேர்வு நமது தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று தெரிவித்தும் தமிழக அரசு எத்தனையோ முறை ரத்து செய்யச் சொல்லியும் செய்யவில்லை சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாசிய பொருள்களின் விலையையும் ஏற்றி விட்ட பாஜக அரசு பதவி விலக வேண்டுமென முழக்கமிட்டனர்.
இதில், வட்டாரத் தலைவர்கள் காந்திஜி, சண்முகசுந்தரம்,பழனிவேல், குருநாதன்,சிவராமன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயமணி,திலகராஜ்,முருகன், துணை அமைப்பு மாவட்டத் தலைவர்கள் செல்லப்பாசரவணன், சோனைமுத்து, மனித உரிமை மாவட்டத் தலைவர் சரந்தாங்கிமுத்து, நகரத் தலைவர்கள் வைரமணி, சசிகுமார்,முத்துப்பாண்டி, முருகானந்தம், வழக்கறிஞர்கள் பிரிவு மேலூர் துரைப்பாண்டி, வாடிப்பட்டி சண்முகசுந்தரம்,
நிவாஸ், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராமசுந்தரம், மற்றும் ஆறுமுகம், நிர்வாகிகள் முன்னால் வட்டாரத் தலைவர் மலைக்கனி,மலை ராஜன்,திரவியம், பிரசன்னா, தவமணி, சதசிவம், சையது, முத்தன், கண்ணுச்சாமி, திருமேனி, விஜயா, சவுந்தரராஜன், கண்ணன், கௌதம், பாலமுருகன், சாமிநாதன், பாலமுருகன்,
வீராச்சாமி, ராமச்சந்திரன், மாயகிருஷ்ணன், தர்மர், லெட்சுமணன், செல்லமணி, மேலூர் சோமசுந்தரம், சக்திவேல், செல்லத்துரை உள்ளிட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, அலங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா, தலைமையில் உதவி ஆய்வாளர் அண்ணாதுரை, சரஸ்வதி, செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu