திருவேடகம் விவேகானந்தா கல்லூரிசார்பில் காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம்

திருவேடகம் விவேகானந்தா கல்லூரிசார்பில்  காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
X

விவேகானந்தா கல்லூரி சார்பில் காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் 

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருவேடகம் விவேகானந்தா கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு , சோழவந்தானில் திருவேடகம் விவேகானந்தா கல்லூரி பொருளாதாரப் பிரிவு மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

சோழவந்தான் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தொடங்கி, நகர் முழுவதும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் காசநோய் வருமுன் தடுப்பது எப்படி, சிகிச்சை முறை பற்றி ஆசிரியர் உரையாற்றினார். இதில், விவேகானந்தா கல்லூரி சுவாமி வேதானந்தா, சுவாமி அத்யமானந்தா வாழ்த்துரை வழங்கினார்கள் . கல்லூரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார்கள்.

மதுரை காசநோய் ஆராய்ச்சி மையம் மருத்துவர் பால் குமரன் மற்றும் மருத்துவர்.மகேஷ் குமார், சென்னை காசநோய் ஆராய்ச்சி மைய மருத்துவர். முனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக ,ஜூபர் ஹசன் முகமது கான் கலந்து கொண்டார். முன்னதாக, கல்லூரியில் மாநில அளவிலான காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil