பள்ளிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் பேசிய காவல் அதிகாரிகள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் சோழவந்தானில் நடைபெற்றது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், சமயநல்லூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலசுந்தர் ஆலோசனையின் பேரில், சோழவந்தான் மற்றும் காடுபட்டி காவல் நிலையங்களுக்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிரானகுற்றங்கள் குறித்து மாணவிகளிடம் விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில், போலீசார் பேசினார்கள்.
சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் தீபா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமைக் காவலர் நாகூர்கனி வரவேற்றார்.சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் முகமது ஆகியோர் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு அம்சங்கள், குழந்தை திருமணம் தடுப்புச்சட்டம், போக்சோ சட்டம்,போதை பொருள் தடுப்பு காவலன் எஸ்.ஓ. எஸ்.செயலின் பயன்கள்,பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி எண் 181,குழந்தைகள் பாதுகாப்பு இலவச எண் 1098 ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்கள்.
இதையடுத்து, சோழவந்தான் காவல் நிலைய தொலைபேசி எண்04543-258226, இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பெண்களுக்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலரின் தொலைபேசி எண்ணும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்,ஆசிரியைகள் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu