சோழவந்தான் அருகே பணி நிறைவு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு பாராட்டு விழா

சோழவந்தான் அருகே பணி நிறைவு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு பாராட்டு விழா
X

சோழவந்தான் அருகே பணி நிறைவு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கத்திற்கு பாராட்டு விழ நடத்தப்பட்டது.

சோழவந்தான் அருகே பணி நிறைவு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் அருகே, நெடுங்குளம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த முத்துராமலிங்கம் பணி ஓய்வு பெற்றதை முன்னிட்டு, அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் பார்த்திபன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் பிபின் சுபாஷ் முன்னிலை வகித்தார். சோழவந்தான் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் கௌதமன் வரவேற்புரை ஆற்றினார்.

வருவாய் வட்ட கிளை தலைவர் ராஜா,தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் முத்துக்குமார் ,வட்டத்தலைவர் செந்தில் குமார், வட்ட செயலாளர் மணிவேல்,வட்ட பொருளாளர் கார்த்திக் மற்றும் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், வருவாய்த்துறை எஸ். சி. எஸ்‌. டி .துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் ஹரிராம், குருவித்துறை கிராம நிர்வாக அலுவலர் முபாரக் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் நில அளவை பிரிவு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் முத்து ராமலிங்கம் ஏற்புரையுடன் நன்றி கூறினார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது