சோழவந்தான் -தியான மையம் சார்பில் கொரோனா எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கினர்.

சோழவந்தான் -தியான மையம் சார்பில் கொரோனா எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கினர்.
X

தாஜி என்று அழைக்கப்படும் கமலேஷ்பட்டேல் 

மதுரை ஹார்ட்ஃபுள்நெஸ் தியான மையம் சார்பில் அனைத்து ஊராட்சிகளுக்கும் கொரானா நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மதுரை ஹார்ட்ஃபுள்நெஸ் தியான மையம் சார்பில் இலவசமாக அனைத்து ஊராட்சிகளுக்கும் கொரானா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கினர்

மதுரை ஹார்ட்ஃபுள்நெஸ் தியான மையம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதியுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக அனைத்து கிராமங்களுக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மாத்திரைகள் ஆர்கானிக் ஆல்பம் வழங்கப்பட்டுள்ளது இதுவரை , வாடிப்பட்டி திருப்பரங்குன்றம் கல்லுப்பட்டி திருமங்கலம் பகுதியிலுள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் கிளார்க் மூலமாக அனைத்து ஊராட்சிகளுக்கும் கொரானா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது மேலும் , அனைத்து கிராமங்களுக்கும் மாத்திரைகள் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் தியான அமைப்பின் தன்னார்வலர்கள் யூனியன் அலுவலகங்களிலும் விடுபட்டுப் போன கிராம ஊராட்சிகளுக்கும் நேரடியாக சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இதன் தலைவராக தாஜி என்று அழைக்கப்படும் கமலேஷ்பட்டேல் இருக்கிறார் இதன் தலைமையகம் ஹைதராபாத்தில் உள்ளது மேலும் விபரங்களுக்கு, www.heartfulness.org இதில் தமிழக அரசின் உத்தரவின்படி முக கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி விதி மீறல்கள் இல்லாமல் செயல்படுத்தப்படுகின்றன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!