மதுரை அருகே கோயில் திருவிழாவில் அன்னதானம்
மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி விசாக திரு விழாவில் பஙகேற்ற பக்தர்கள்
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஏழாம் நாள் மண்டகப்படி விஸ்வகர்மா ஐந்திணை தொழிலாளர்கள் சார்பில் மரக்கன்று, அன்னதானம் வழங்கி வழிபாடு நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 22 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் மண்டகப்படியாக சோழவந்தான் விஸ்வகர்மா ஐந்திணை தொழிலாளர்கள் சார்பில் அக்கசாலை விநாயகர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில், சிவகங்கை மாவட்ட நீதிபதி சுந்தர்ராஜ், சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், திமுக பேரூர் செயலாளரும்.9வது வார்டு கவுன்சிலருமான வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் கண்ணன் ,மணி, அங்குசாமி, நாகு ஆசாரி ,பிச்சைமணி, முருகன், ஜெயராஜ், அய்யனார், ராமகிருஷ்ணன், பாலமுருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu