மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ர யில் முன் பாய்ந்து ,முதியவர் தற்கொலை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ர யில் முன் பாய்ந்து ,முதியவர் தற்கொலை
X
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ர யில் முன் பாய்ந்து ,முதியவர் தற்கொலை செய்து கொண்டு பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  1. சோழவந்தான் ரயில் நிலையம் அருகில், ரயிலில் விழுந்து முதியவர் தற்கொலை செய்தது பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  2. மதுரை சென்னை இடையே தினமும் அதிநவீன தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
  3. இந்நிலையில் மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் நிலையம் அருகில், மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் அதிவிரைவு ரயிலில் விழுந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். சோழவந்தான் ரயில் நிலையத்தை தாண்டி அரைகிலோ மீட்டர் தொலைவில் 70 வயது முதியவர் அதிவேகமாக சென்ற ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். முதியவர் ரயிலின் குறுக்கே விழுந்ததில் உடல் துண்டு துண்டாகி அடையாளம் தெரியாத வகையில் இருந்ததால் எங்கிருந்து வந்தார். இவரின் முகவரி உள்ளிட்ட எந்த ஒரு தகவலும் தெரியாததால், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  4. மேலும் ,இறந்து கிடந்தவர் அருகில் கட்டை பை மற்றும் காவித்துண்டு கிடந்ததால் ஆன்மீக தலங்களுக்கு சென்று வந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!