சோழவந்தான் திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

சோழவந்தான் திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், புரிந்துணர்வு  ஒப்பந்தம்..!
X

மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அதைத்தொடர்ந்து மனநலம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

மதுரை:

திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் விவேகானந்த கல்லூரியின் மனநல ஆலோசனை மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வு மற்றும் மனநலம் மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு, செயலர் சுவாமி வேதானந்த குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினார்கள்.மனநல ஆலோசனை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்லப்பாண்டியன் வரவேற்புரை ஆற்றினர்.

கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதுரை, எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிகழ்ச்சிகள் இயக்குநர் கே.எஸ்.பி.ஜனார்தன் பாபு மற்றும் திரிசூலம் ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையத்தின்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாங்கம் இன்றைய சமூகத்தில் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதிப்புகளில் இருந்து மீண்டு நல்வாழ்வு வாழ வழிமுறைகள் பற்றி எடுத்துக் கூறினர். அகத்தர உறுதிமைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா.சதீஷ் பாபு நன்றியுரை ஆற்றினார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது