சோழவந்தான், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளிடம் வசூல்?

சோழவந்தான், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளிடம் வசூல்?
X

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பணம் வசூல் செய்த விவகாரத்தை பெற்றோர் வெளியில் சொல்ல அச்சப்படுகின்றனர்.

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் வசூல் பெற்றோர் குமுறல்:

சோழவந்தான்:

மதுரை அருகே, சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் கழிப்பறை சுத்தம் செய்ய, மற்றும் பள்ளி காவலர் பணி பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து நியமிக்க கூடிய ஆசிரியர் ஆகியவற்றிற்கு ஆகும் செலவுக்காக இங்கு படிக்கக்கூடிய மாணவியரிடம் ரூ.350வீதம் வசூல் செய்வதாக பெற்றோர்கள் புகார் கூறி வருகின்றனர்.

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சோழவந்தான் மற்றும் இதனை சுற்றியுள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார்1600 மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு சுமார் 50 ஆசிரியர்கள் உள்பட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இங்குள்ள கழிவறை சுத்தம் செய்வதற்கும், பள்ளி வாட்ச்மேன் சம்பளம், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக மாணவிகளிடம் தலா ரூ.350 வீதம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து, ஆசிரியரிடம் கேட்டபொழுது வசூலிக்கக்கூடிய பணத்தில் 100 ரூபாய் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கும் மீதி ரூபாய் கழிப்பறை சுத்தம் செய்யக்கூடியவருக்கும் பள்ளி காவலருக்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று கூறியதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, பெற்றோர்கள் கூறும் பொழுது, எங்களது பெண் குழந்தைகளை தொடக்கப் பள்ளியில் படிக்க வைத்த பொழுது இது போன்ற தேவைகள் அந்தப் பள்ளியில் இருந்தது. அங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் மாதந்தோறும் ஒரு தொகையை ஒதுக்கி இதற்கான செலவுகளை ஈடு கட்டி வந்தனர்.

இது மட்டுமல்லாது சில பள்ளிகளில் தூரத்தில் இருந்து வரக்கூடிய மாணவ மாணவிகளுக்கு வேன் செலவுகளையும் அங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் கொடுத்து உதவுகின்றனர். குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று, தமிழக அரசுபல்வேறு திட்டங்களை செய்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.

ஆனால், இங்குள்ள அரசு பள்ளியில் சுமார் 1500 மாணவிகள் படிக்கின்றனர். ஒரு மாணவிக்கு 350 ரூபாய் என்றால் ஆயிரத்து 500 மாணவிகளுக்கு எவ்வளவு பணம் என்று பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு பணியாற்ற கூடிய ஆசிரியர்கள் 70 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக பேசிக் கொள்கிறார்கள். ஏன் இந்த பள்ளியில், பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களால் இயன்ற தொகையை ஒதுக்கி அரசு பள்ளியில் படிக்கக்கூடிய ஏழை மாணவிகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மாணவிகளுக்கு உதவி செய்யக் கூடாதா?

அரசும் இதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று, ஆதங்கத்துடன் தங்களுடைய பெயரை சொல்ல வேண்டாம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். மேலும், இது போன்ற அரசு பள்ளியில் உதவியாளர், பள்ளி காவலர், துப்புரப் பணியாளர்,லேப் அசிஸ்டன்ட் மற்றும் கிளார்க் உட்பட பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் இதற்கான பணியாளர்களை நியமிக்கவில்லை என்று தெரிகிறது.

ஆகையால், நிரப்பப்படாத பள்ளிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து காலியாக உள்ள பணிக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.ஒவ்வொரு பள்ளியிலும் பல்வேறு குறைகள் இருந்தாலும் அதை பெற்றோர்களிடம் மனவேதனையுடன் கூறக்கூடிய மாணவ மாணவிகளுடைய குமுறல்களை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்கு பெற்றோர்கள் பின் வாங்குகிறார்கள்.

ஏனென்றால், எந்த பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் குறைகளை தெரிவிக்கிறார்களோ அவர்களுடைய குழந்தைகளுடைய,கல்வி பாதிக்குமோ என்ற பயத்தால் பள்ளியில் நடைபெறும் குறைகளை சொல்ல முன் வருவதில்லை. ஒரு சில பள்ளிகளில் துப்புரவு பணியாளர்,உதவியாளர், கிளர்க் ஆகியோருடைய வேலைகளை ஒரு சில ஆசிரியர்கள் செய்த வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story