விவேகானந்த கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு கூட்டம்

படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விவேகானந்த கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு கூட்டம்
X

விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற, முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு கூட்டம்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் முரளி கிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த, விவேகானந்தா பள்ளி செயலர் சுவாமி பரமானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆசி உரை வழங்கினர்.

கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் கல்லூரியின் வளர்ச்சி பற்றி உரையாற்றினார். சங்கத்தின் இணைச்செயலாளர் செல்வம் சங்கத்தின் கடந்த ஆண்டின் நிகழ்வுகள் பற்றி உரையாற்றினார். பொதுக்குழு கூட்டத்தில், வந்திருந்த உறுப்பினர்களின் ஒப்புதலோடு சங்கத்தின் வரவு செலவினை பற்றி முறையான அறிக்கையை சங்க பொருளாளர் முனைவர் பட்டினத்தார் விளக்கி கூறினார்.சங்க உறுப்பினர்கள் அவர்களது ஆலோசனைகள் எதிர்பார்ப்புகள் குறித்து பேசினர்.

படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சங்கத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. .

மேனாள் துணை முதல்வர் முனைவர் இளங்கோ மற்றும் மேனாள் முதல்வர் முனைவர் ராமமூர்த்தி, மேனாள் பொருளியல் துறை ஆசிரியர் முனைவர் ஜெயபாலன், மேனாள் ஆங்கிலத் துறை பேராசிரியர் முனைவர் வெங்கடசுப்பு, மேனாள் விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் ஜெயக்குமார் மற்றும் மேனாள் வேதியல் துறை பேராசிரியர் முனைவர் செவ்வேள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கல்லூரி அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு, குருகுல ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகரன், வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர்கள் கார்த்திகேயன் மற்றும் முனைவர் மாரிமுத்து, விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ், மற்றும் வேதியல் துறை தலைவர் சேர்வாரமுத்து, வேதியல் துறை பேராசிரியர் தர்மானந்தம் ஆகியோர் கூட்டத்தை ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்

மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை அந்தந்த துறை சார்ந்த முன்னாள் மாணவர்கள் அந்தந்த துறை மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களை விளக்கி கூறினர்.. முன்னாள் மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வடிவேல் ராஜா நன்றி கூறினார்.

Updated On: 24 Sep 2023 11:00 AM GMT

Related News

Latest News

 1. க்ரைம்
  தூத்துக்குடி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர்...
 2. காங்கேயம்
  சிவன்மலை கோயில் மலைப் பாதையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 54 சோலாா்...
 3. தாராபுரம்
  குண்டடம்; 16 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான...
 4. குமாரபாளையம்
  குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கம் வெள்ள நிவாரண...
 5. திருப்பூர் மாநகர்
  அவிநாசி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் திரண்ட...
 6. குமாரபாளையம்
  பள்ளிபாளையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு: 11 கடைகள் மீது...
 7. சென்னை
  சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan temple- சபரிமலையில் பக்தர் கூட்டம் அதிகரிப்பு;...
 9. அரசியல்
  தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி
 10. தொழில்நுட்பம்
  சியோமி ரெட்மி 13C 5G: பட்ஜெட் ஃபோன்களின் புதிய சூப்பர்ஸ்டார்