அலங்காநல்லூர் : கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி

அலங்காநல்லூர் : கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி
X
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.
சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, முதலாவது மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டிகள் மூன்று நாட்கள் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதில், சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற சென்னை எஸ். ஆர். எம். கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசும், கோப்பையம் பெற்றனர் .மேலும், தொடர்ந்து 2,3,4, பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்த பரிசளிப்பு விழாவிற்கு, அலங்காநல்லூர் கூடைப்பந்து கிளப் தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். கிளப் செயலாளர் ஆசிரியர் காட்வின் வரவேற்றார் . வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலை வகித்து, பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜா, பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், திமுக மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், கூட்டுறவு வங்கித் தலைவர் முத்தையன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் . முடிவில், கூடைப்பந்து கிளப் உறுப்பினர் ஹரிகாமு நன்றி கூறினார்.

Tags

Next Story
ai marketing future