அலங்காநல்லூர் அருகே சமயபுரம் மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!

அலங்காநல்லூர் அருகே சமயபுரம் மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
X

அலங்காநல்லூர் சமயபுரம் மாரியம்மன் கோயில்  கும்பாபிஷேகத்தையொட்டி கலசத்துக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி.

அலங்காநல்லூர் அருகே காந்திகிராமத்தில் சமயபுரம் மாரியம்மன் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர் :

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சி காந்தி கிராமத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த விழாவில் மங்கள இசை முழங்க கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கருடகோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து மூன்று கால யாகபூஜையுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றபட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வருகை தந்த பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காந்திகிராம கோவில் விழா கமிட்டியாளர்கள், செய்து இருந்தனர்.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார். மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil