புள்ளிங்கோக்களால் பதறும் அலங்காநல்லூர் அரசு பள்ளி மாணவிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

புள்ளிங்கோக்களால் பதறும் அலங்காநல்லூர் அரசு பள்ளி மாணவிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
X

புள்ளிங்கோ- காட்சி படம் 

அதிவேக பைக் ரேஸ் மூலம் அலங்காநல்லூர் அரசு பள்ளி மாணவிகளை அச்சுறுத்தும் புள்ளிங்கோக்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சுற்றி சமூக விரோதிகள் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி விட்டு வரும் மாணவிகளை அச்சுறுத்தும் விதமாகவும் தலைமுடியை பிடித்து இழப்பது, புத்தகப் பையை பிடுங்குவது போன்ற இடையூறான பாலியல் ரீதியாக வன்முறை செய்து வருகிறார்களாம்.

பள்ளி விட்டு வெளியேறும் மாணவிகள் கூட்டத்திற்குள் அதிவேகமாகவும் பயங்கரமான ஒலி எழுப்பும்ஹாரன் மூலம் சத்தம் எழுப்பியவாறும், இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து கொண்டு வந்து துன்புறுத்துவதாக மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கண்காணிப்பு செய்து மாணவிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தாலும், அட்டகாச இளைஞர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது குறித்த தகவல் காவல் நிலையத்தில் தெரிவித்து காவலர்கள் ரோந்து பணியில் உள்ள நேரத்தில் மட்டும் இது போன்ற அடாவடி சம்பவங்கள் தவிர்க்கப்படுகிறது. காவலர்கள் சென்றவுடன் பைக் ரேஸ் அத்துமீறல் தொடர்கதையாகி வருகிறது. அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஊருக்கு ஒதுக்கப்புறமாகவும் மாணவிகள் நடந்து வரும் பாதையில் இருபுறமும் முல்லைப் பெரியாறு கால்வாய் அருகே சாலை அமைக்கப்பட்டுள்ளதால், எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத ஒரு சூழ்நிலை உள்ளது.

எனவே, பள்ளிக்கு வரும் சாலை பகுதிகளில் அதிவேக வாகன ஓட்டும் இளைஞர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுத்து அத்துமீறுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். பள்ளி வரும் பாதையில் காவல் தடுப்பு வேலி அமைத்து வாகன வேகத்தை கட்டுப்படுத்த தடைகள் ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அலங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது போன்ற அத்து மீறிய சம்பவங்களால் மாணவிகள் பலர் பள்ளிக்கு வருவது தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags

Next Story
how to bring ai in agriculture