அலங்காநல்லூர் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி: பூமி பூஜையில் அமைச்சர் மூர்த்தி

அலங்காநல்லூர் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி: பூமி  பூஜையில் அமைச்சர் மூர்த்தி
X

அலங்காநல்லூர் பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக நடைபெற்ற பூமி பூஜை.

ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் அலங்காநல்லூர் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளை அமைச்சர் மூர்த்தி, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில், ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிககளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:-

மதுரை மாவட்டத்தில் , அலங்காநல்லூர் கிராமம் மிகவும் பாரம்பரியமான கிராமமாகும். அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை 6 மாத காலத்திற்குள் முழுமையாக நிறைவேற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை தொடர்ந்து, கண்காணித்து விரைவாகவும் மிகத் தரமாகவும் நிறைவேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் , அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர் கோ.ரேணுகா ஈஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story