அலங்காநல்லூரில் பாஜக செயற்குழுக் கூட்டம்

அலங்காநல்லூரில் பாஜக செயற்குழுக் கூட்டம்
X

அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மண்டல செயற்குழுக் கூட்டம்.

மதுரை அலங்காநல்லூரில் பாரதிய ஜனதா கட்சி தெற்கு மண்டல செயற் குழுக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மண்டல செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் இருளப்பன், மீனவரணி மாநில செயலாளர் சண்முகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் சீதாராமன், மாநில பொதுக் குழு ஆண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அறிவுசார் பிரிவுத் தலைவர் சந்தோஷ் சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பாஸ்கரன், ஒன்றியச் செயலாளர் வீரன் ஆகியோர் நன்றி கூறினர்.

இதில், 50-க்கும் மேற்பட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!