ஐப்பசி பௌர்ணமி, கோயில்களில் ,சிவனுக்கு சிறப்பு பூஜைகள்!
மதுரை அருகே ,திருப்பரங்குன்றத்தில், சிவனுக்கு சிறப்பு பூஜைகள்.
ஜப்பசி பௌர்ணமி: கோயில்களில் சிறப்பு பூஜைகள்
திருப்பரங்குன்றம் அருகே தென்பரங்குன்றத்தில் உள்ள பால் சுனை சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்பரங்குன்றம் அருள்மிகு பால் சுனை சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பூஜை நடைபெற்றது.
சிவனுக்கு 16 வாசனை திரவியங்கள் அபிஷேகத்துடன் அன்ன அபிஷேகமும் நடைபெற்றது .
இதனைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு, பிரசாதமாக சாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதே போல், மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு, சுவாமிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அண்ணாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு, சிறப்பு அர்ச்சனை வழிபாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி பூபதி, எழுத்தர் வசந்த், கவிதா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர் வள்ளி மயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதே போல, சோழவந்தான் வட்டப் பிள்ளையார் ப கோவில் அருகே உள்ள, புட்டு விநாயகர் ஆலயத்தில் வரதராஜப் பண்டிட் தலைமையில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, அன்னாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பலர் சிவனை வழிபட்டு பிரசாதங்களை பெற்றுச் சென்றனர். மேலும், சோழவந்தான் அருகே தென்கரை மூலநாதசுவாமி துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், கீழமாத்தூர் மணிகண்டேஸ்வரர் ஆலயம் ,திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களிலும் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு, சிவனுக்கு அண்ணாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu