அலங்காநல்லூர் அருகே, அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
அதிமுக உறுப்பினர்களுக்கு, புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
சோழவந்தான்.
அலங்காநல்லூர் அருகே, முடுவார்பட்டி யில், அதிமுக புதியஉறுப்பினர் அட்டை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் வழங்கினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றிய கழகம் சார்பில், முடுவார்பட்டியில் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட விவசாய அனி செயலாளர் அலங்காநல்லூர் முன்னாள் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர். ராம்குமார் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றியக் கழகச் செயலாளர்கள். காளிதாஸ், அரியூர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், தமிழரசன், வாடிப்பட்டி சேர்மன் ராஜேஸ் கண்ணா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர். பி. உதயகுமார் கலந்துகொண்டு, புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர். ஜெயசந்திரமணியன், மாவட்ட விவசாய அனி இணைச் செயலாளர் ஆர்.பி. குமார், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பி.முத்துகிருஷ்ணன், பால் பன்னை முன்னாள் தலைவர் விவசாய அனி தலைவர் காமாட்சி, விவசாய அனி ஒன்றியக் கழக செயலாளர். அழகுமலை, ஒன்றியப் பொருளாளர். பன்னைகுடி மகாராஜன், துணைச்செயலாளர். ஆதனூர் சேகர், ஊராட்சி மன்றத் தலைவர். சத்திரவெள்ளாப்பட்டி சிதம்பரம், இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய கழக செயலாளர் மதன், பெரிய இலந்தகுளம் கிளைக் செயலாளர் செந்தில்குமார், வாவிடமருதூர் கிளை கழக செயலாளர்கள்.ஆர்.பி. கோபி, வீ.விநாயகம், எஸ்.கனேசன், பிச்சைபான்டி, கள்வேலிபட்டி, பாரி.கருப்பையா, மேலச்சின்னம்பட்டி சம்பத், உமாபதி, அம்மாபேரவை மனோகரன், வலசை. சுப்பிரமணியன், புதுப்பட்டி கிளைச் செயலாளர் பாண்டு ரெங்கன், முத்துக் குமார், மாவட்ட பிரதிநிதி. உமேஸ்.மாணிக்கம், மகாராஜன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை முடுவார்பட்டி ராஜ்குமார், பெரிய ஊர்சேரி முத்துராமன் கார்த்திக், செந்தில், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu