அலங்காநல்லூர் அருகே முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம்

அலங்காநல்லூர் அருகே முன்னாள் அமைச்சர்  தலைமையில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம்
X

 அதிமுக  முன்னாள் அமைச்சர் உதயகுமார்  தலைமையில் பொதும்பு கிராமத்தில் அதிமுக சார்பில் கள ஆய்வுக்கு கூட்டம்

அதிமுக உறுப்பினர் சேர்க்கை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளும் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது

பொதும்பு கிராமத்தில் அதிமுக சார்பில் கள ஆய்வுக்கு கூட்டம் நடைபெற்றது.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு ஊராட்சியில் அதிமுக சார்பில் மேற்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளும் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், கொரியர் கணேசன், மகாலிங்கம், பொதும்பு கூட்டுறவு சங்கத் தலைவர் மலர்க்கண்ணன், துணைத் தலைவர் ராகுல், மாவட்ட பிரதிநிதி சாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதாராதாகிருஷ்ணன், அம்முலோகேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி தண்டலை ஆனந்த், நெடுங்குளம் கிளைச் செயலாளர்தங்கமுருகன், சோழவந்தான் நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், ஒன்றிய பொருளாளர் சண்முகபாண்டியராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார். சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.

ஒரு உறுப்பினர் விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு படிவத்தில் 25 உறுப்பினர் களை சேர்த்துக் கொள்ளலாம். அதிமுகவில் உறுப்பினர்களாக சேர விரும்புவோர் ரூ.10 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்