வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் தகவல்

வாடிப்பட்டியில் அதிமுக  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் தகவல்
X

பைல் படம்

பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாகக் குறைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் வாடிப்பட்டியில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாகக் குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு அளிக்கவும், பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை அளிக்க வேண்டும்.

அம்மா மினிகிளிக்கை திமுக அரசு மூடுவதை கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்து இருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், தூய்மைப் பணியாளருக்கு ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் வாடிப்பட்டியில் நாளை காலை 10.30 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய பெருமக்கள், பொதுமக்கள், தாய்மார்கள் ,இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அணி திரண்டு பங்கேற்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business