அலங்காநல்லூர், பாலமேட்டில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அலங்காநல்லூர், பாலமேட்டில் தமிழக அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தி.மு.க .அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகரச் செயலாளர் அழகுராஜ் தலைமை தாங்கினார். ஒன்றியச்செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், துணைச்செயலாளர் சம்பத் ஒன்றியக்கவுன்சிலர் ரேவதி, பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், அய்யூப் நடராசன். வெள்ளை கிருஷ்ணன், கேட்டுகளஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜ்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும், தி.மு.க. அரசு தொடர்ந்து வாக்களித்த மக்களை வஞ்சித்து வருதாகவும், அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. மின் கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. எனவே, சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை உடனே திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினார்கள்.
இதேபோன்று பாலமேடு பேரூர் கழகம் சார்பில் நகர் செயலாளர் குமார் தலைமையில் பேரூராட்சி துணை சேர்மன் ராமராஜ், முன்னாள் பேரூர் செயலாளர் ஆறுமுகம், ராஜவேல் பாண்டியன், சேகர் ஆகியோர் முன்னிலையில் பாலமேடு பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கி வரும் தமிழக அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu