முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து  அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

முன்னாள் அமைச்சர் கைது செய்வதை கண்டித்து, அதிமுகவினர் சோழவந்தானில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் ஆட்சியரிடம் மனு அளிக்கச்சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை போலீஸார் கைது செய்தனர்

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சோழவந்தானில் அதிமுகவினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், மேலூர்- திருமங்கலம் மற்றும் 58 கால்வாய் உள்ளிட்டவைகளுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் தொகுதிகளை புறக்கணிக்கும் தமிழக அரசை கண்டித்தும், முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் , ஆர். பி. உதயகுமார் மற்றும் அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவத்தைக் கண்டித்து, மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் தொடர்ச்சியாக, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கொரியர் கணேசன் ஆலோசனையின் பேரில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் அவைத் தலைவர் கச்சிராயிருப்பு முனியாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன், பொருளாளர் தங்கபாண்டியன், திருவேடகம் சிபிஆர் மணி, நகர இளைஞரணி செயலாளர் கேபிள் மணி ,பேரூர் துணை செயலாளர்தியாகு ,தொகுதி பாலு, சபரிமலை, வைகை மணி மற்றும் வார்டு செயலாளர்கள் பத்தாவது வார்டு இன்ஜினியர் மணி, சங்கையா, எஸ்பி மணி, ராமச்சந்திரன், மருது சேது, பேட்டை பாலா, ஜூஸ் கடை கென்னடி மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்தியற்குட்பட்ட நிர்வாகிகள், சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள்உள்பட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story