மதுரை அருகே தேனூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மதுரை அருகே தேனூரில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை திறந்து வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
அதிமுக சார்பில், நீர் மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்து வைத்தார்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் , சோழவந்தான் தொகுதி யில் உள்ள, மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட தேனூரில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் கலந்து கொண்டு நீர் மோர் பந்தல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் .
இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மேற்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன், தேனூர் கிளைக் கழகச் செயலாளர் பாஸ்கரன், அதிமுக நிர்வாகிகள் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ்கண்ணா, வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் கொரியர் கணேசன், மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சவர்ணம், நிர்வாகிகள் ஜோதிமுருகன், திருப்பதி மற்றும் தேனூர் கிளை கழக நிர்வாகிகள் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையபட்டி கிளைச் செயலாளர் தனுஷ்கோடி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ பேசியதாவது: முதலமைச்சர் துபாய் சென்று வந்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்ற போது சாதாரண விமான நிலையத்தில் சென்று வந்துள்ளார். அப்போது 8,000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வந்தார். இப்போது, 5000 கோடி பெற்று வந்துள்ளோம் என்று முதலமைச்சர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அவர், பயணம் செய்த விமான பயணத்தில் குழப்பம் உள்ளது . தனி விமானத்தில் சென்றுள்ளார். பயணிகள் விமானத்தில் செல்வதற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என புத்திசாலிதனமாக சொல்லி குழப்பத்தை அரங்கேற்றியுள்ளனர். ஒரு பொய்யை மறைக்க நூறு பொய் சொல்வது போல, தனி விமானத்தில் சென்ற செலவை திமுகவை ஏற்கும் என்று கூறியுள்ளனர். திமுக ஏற்பாடு செய்த விமானத்தில் அரசு அதிகாரிகள் எப்படி செல்ல முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று .அவர்கள் சொன்ன பதிலால் அதிகாரிகள் மாட்டிக் கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் வரவேற்பு சிறப்பாக உள்ளதாக கூறியுள்ளார். இவர்கள் செல்வதற்கு முன்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன் சென்று அங்குள்ள துபாய் பிரதமருடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால், நீங்கள் ஏன் பிரதமரை சந்திக்க வில்லை கடைசி நேரத்தில் நீங்கள் கிடைத்த அமைச்சர்களை அழைத்துக் கொண்டு முதலீடு செய்ய வந்ததாக கூறியுள்ளார்கள். முதலமைச்சர், துபாய் சென்று வந்தது பல்வேறு குளறுபடிகளையே காட்டுகிறது. அது சாதனைகளாக வெளிவரவில்லை .
அம்மா ஆட்சி காலத்தில் நீர் மேலாண்மையில் இந்தியாவிலே தமிழகம் முதலிடத்தில் இருந்தது தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது.அம்மா ஆட்சி காலத்தில் காவேரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்து 50 ஆண்டு கால பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டது .காவேரி குடிமராமத்து திட்டத்தின் மூலம் ரூ .1,132 கோடி செலவில் 5,586 தூர்வாரி சீரமைக்கப்பட்டன . இதன் மூலம் நீர் ஆதாரம் தமிழகத்தில் பெருகின.
ஆகவே , குடிமராமத்து திட்டப் பணிகளுக்கு அரசு நிதிஒதுக்கீடு செய்யுமா என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.நீர் நிலைகள் காவேரி டெல்டா பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்ச குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. .2021 ஆம் ஆண்டில் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது .பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் மூலம் ரூ .9,287 கோடி இழப்பீட்டு தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்றார் ஆர்.பி. உதயகுமார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu