அலங்காநல்லூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

அலங்காநல்லூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
X

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் தலைமை அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

திமுக அரசைக்கண்டித்து திருமங்கலத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்

திமுக அரசைக் கண்டித்து அதிமுக போராட்டம் நடத்துவது தொடர்பாக அலங்காநல்லூரில், முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் தலைமை அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக அரசைக்கண்டித்து வருகின்ற திங்கள்கிழமை திருமங்கலத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமென நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.

அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக ஒன்றியச்செயலாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் அழகுராசா, ஒன்றியக் கவுன்சிலர்கள் ஆர். சி .பிரபு ரேவதி, பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், மாவட்ட பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், வெற்றிவேல், திருப்பதி சரவண பாண்டி மற்றும் வக்கீல் ராஜ்குமார் கேபிள் பாஸ்கர்,வெள்ளை கிருஷ்ணன், புளி அம்மாள், லதா முன்னாள் கவுன்சிலர் மதலையப்பன்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம் ,கிளைச் செயலாளர் மயில் வீரன், முரளிபாஸ்கரன், சம்பத் தாமரை, ஆறுமுகத்தம்மாள் பூமிநாதன், தனசேகரன், மணி, தவமணி ,செந்தில் ராஜன் ,கார்த்திக் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!