பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி அதிமுக கவுன்சிலர் போராட்டம்
பேரூராட்சி அலுவலகம் முன் குடில் அமைத்து அதிமுக கவுன்சிலம் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்
வாடிப்பட்டியில் கழிவுநீர் கால்வாய் அமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர் பேரூராட்சி அலுவலகம் முன் குடில் அமைத்து காத்திருக்கும் போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 4 வார்டு ஆர்.வி.எஸ். நகரில் கழிவுநீர் முறையாக செல்ல கால்வாய் அமைக்காததால் அதிமுக 4 -ஆவது வார்டு கவுன்சிலர் இளங்கோவன் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். பேரூராட்சி அதிகாரிகளை கண்டித்து, வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் குடில் அமைத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கழிவுநீர் செல்ல வழியில்லாததால் டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை காத்திருக்கும் போராட்டத்தில ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி அதிமுக கவுண்டர் நடத்திய போராட்டம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu