மதுரை அருகே ஆதி மாசாணியம்மன் கோயில் விழா

மதுரை அருகே ஆதி மாசாணியம்மன் கோயில் விழா
X

சோழவந்தான் அருகே குருவித்துறைஆதிமாசாணிஅம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் அருகே குருவித்துறை வேடர்குளம் ஆதிமாசாணி அம்மன் கோவில் திருவிழா 5 நாட்கள் நடைபெறுகிறது

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, மன்னாடி மங்கலம் அருகே குருவித்துறை வேடர்குளம் ஆதிமாசாணி அம்மன் கோவில் திருவிழா 5 நாட்கள் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை வேட்டார்குளம் அருகில் அமைந்துள்ள ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும். தற்போது, கொரோனா கட்டுப்பாடு இருப்பதால் , திருவிழா எளிமையாக நடந்தது.

இந்த விழாவை முன்னிட்டு, முதல் வாரம் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். நேற்றைய தினம் மயான பூஜை இன்று காலை வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது. பின்னர், அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. கோவில் ,தலைமை நிர்வாகி மாசாணி சின்ன மாயன் நிர்வாகிகள் கலாராணி சிவராஜா மாசாணிராஜா கங்கேஸ்வரி சவுந்தரபாண்டி உள்பட பக்தர்கள் மேளதாளத்துடன் வைகை ஆற்றுக்கு சென்று சக்தி கரகம் அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

வழிநெடுக பெண்கள் அவர் காலில் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர். கோவிலுக்கு வந்து பூஜைகள் நடந்து பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை காலை பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் கோவிலில் இருந்து முளைப்பாரி சக்தி கரகம் ஊர்வலமாகச்சென்று வைகை ஆற்றில் கரைக்கும் விழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து, சக்தி அலங்காரம் நடைபெறும் இரவு 8 மணிக்கு மகா முனீஸ்வரர் கருப்புசாமி பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!