சோழவந்தான் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை: அதிமுக எம்.பி
சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி அரசு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த தேனி மக்களவை அதிமுக எம்பி ப. ரவீந்திரநாத்
சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று சென்ற அனைத்து ரயில்களும் மீண்டும்.நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்.
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பகுதிகளில் , நலத்திட்டங்களை தொடங்கி வைத்து சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.அதன் தொடர்ச்சியாக, சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி அரசு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் கொரியர் கணேசன், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.நாச்சிகுளம் ஊராட்சி மன்றத்தலைவர் சுகுமார், ஒன்றியக் கவுன்சிலர் தங்கப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, புதிய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் ஓ பி ரவீந்திரநாத் எம்.பி. கூறியதாவது:
மதுரை ,போடி அகல ரயில் பாதை தேனி வரை நடைபெற்று வரும் விரைவில் ,போடி வரை பணிகளையும் முடித்த பின்பு, சோதனை ஓட்டம் நடைபெறும் . இந்த ரயில் சேவையினை முறைப்படி, மத்திய அமைச்சர் வருகை புரிந்து துவக்கி வைப்பார்.கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக்காலத்தில் மின் பற்றாக்குறை இல்லை. தற்போது, திமுக பொறுப்பேற்றவுடன் மின்வெட்டு தொடர்ந்து வருகிறது.
நீட் தேர்வை பொருத்தவரை, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழியை அதிமுக தலைமை பின்பற்றும்.தேசிய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு நிலைப்பாடு குறித்து கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை.சோழவந்தான் ரயில் நிலையத்தில், நின்று சென்ற அனைத்து ரயில்களும் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.அதிமுக அமைப்பு தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி ஊராட்சிஒன்றியத் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, தென்கரை பஞ்சவர்ணம் ராமலிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, மன்னாடிமங்கலம் தெற்கு கிளைச் செயலாளர் ராஜபாண்டி இரும்பாடி சக்திவேல், விவசாய அணி வாவிடமருதூர் குமார் வாவிடமருதூர் ஊராட்சி மன்றத்தலைவர் திருநாவுக்கரசு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu