அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்
X

மதுரை அருகே அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறப்பு தொடர்பான கூட்டத்தில் பேசினார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்.

Action to run Alankanallur National Cooperative Sugar Mill

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம். ஆர் .கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் வளாகத்தில், தமிழக முதலமைச்சர் ஆணைக்கினங்க, மீண்டும் இந்த ஆலை இயங்குவதற்கான சிறப்புஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை வகித்தார். வணிகவரி பத்திர பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலை வகித்தார். தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி, கரும்பு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து 45 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆலை இயக்கவில்லை. இந்நிலையில், கரும்பு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று அரசு அடுத்த ஆண்டு கரும்பு அரைக்க நடவடிக்கை எடுக்கும். மேலும், விவசாயிகள் சுமார் 4 லட்சம் டன்னிற்கு மேல் கரும்பு பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் வரும் ஆண்டில் ஆலை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

இதையடுத்து,மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் , பூமிநாதன் எம்எல்ஏ, மற்றும் ஆலையின் உயர் அதிகாரிகள், வருவாய், வேளாண்மை துறை, அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினா். ஆலை நிர்வாக இயக்குனர் செந்தில்குமாரி வரவேற்றார். திமுக பொதுகுழு உறுப்பினர் தனராஜ், அவைத்தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன், அலங்கார பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர் சாமிநாதன், ஒன்றியக் குழுத்தலைவர் பஞ்சு அழகு, துணைத்தலைவர் சங்கீதா மணிமாறன், இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு,முன்னாள் சேர்மன் ரகுபதி, இடையபட்டி நடராசன், பாலமேடு தனசேகரன் பாண்டியன்,நிர்வாக குழு உறுப்பினர் நல்லமணி காந்தி, பன்னைரகுடி மைனர் ராமச்சந்திரன்,சரந்தாங்கி முத்தையன், கரும்பு விவசாயிகள் தொழிலாளர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story