அலங்காநல்லூர் மேலச்சின்னணம்பட்டி முத்துக்கருப்பணசாமி கோவில் மண்டல பூஜை

அலங்காநல்லூர் மேலச்சின்னணம்பட்டி முத்துக்கருப்பணசாமி கோவில் மண்டல பூஜை

அலங்காநல்லூர் அருகே  மேலச்சின்னணம்பட்டி முத்துக்கருப்பணசாமி கோவில் மண்டல பூஜை நடைபெற்றது.

அலங்காநல்லூர் மேலச்சின்னணம்பட்டி முத்துக்கருப்பணசாமி கோவில் மண்டல பூஜை நடைபெற்றது.

மேலச்சின்னணம்பட்டி கிராமத்தில் முத்துக்கருப்பணசாமி திருக்கோவில் 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள மேலச்சின்னணம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துக்கருப்பணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. வேள்வி பூஜையில், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை, மங்கல இசை முழங்க தீபாராதனை நடைபெற்றது.

ராமேஸ்வரம், அழகர்கோவில், காசி, கங்கை, உள்ளிட்ட திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையை சுற்றி வலம் வந்து வேத மந்திரம் முழங்க கருவறையில் உள்ள முத்துக்கருப்பணசாமி ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு 48 வது நாள் மண்டல பூஜையும் அதனை தொடர்ந்து மலர் அலங்காரமும் நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்த உள்ளூர் மற்றும் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு, பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, திருப் பணிக் குழு மற்றும்ஸ்ரீ முத்துக்கருப்பணசுவாமி கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story