திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சி

திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சி
X

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சி.

திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி வெளிப்பாடு நிகழ்வு:

மதுரை:

மதுரை அருகே, திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், கல்லூரியின், ஒலி ஒளி அரங்கில் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி வெளிபாடு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்குக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரையும், கல்லூரி செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரையும், கல்லூரியின் துணைமுதல்வர் க.கார்த்திகேயன் வாழ்த்துரையோடு, கல்லூரியில் உள்ள இளங்கலை படிப்புகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் உதவித்

தொகைத்திட்டங்கள், போட்டித்தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும் உரை வழங்கினார். மேலும், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,பாண்டிகுமார் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில், சோழவந்தான் அரசஞ்சண்முகனார் மேனிலைப்பள்ளியைச் சார்ந்த 35 மாணவ,

மாணவியர்களும், 3ஆசிரியப்பெருமக்களும், வாடிப்பட்டி, ஆலங்கொட்டாரம் அரசு ஆண்கள் மேனிலைப்

பள்ளியைச் சார்ந்த 35 மாணவர்களும், 3 ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டு கல்லூரியில் உள்ள அனைத்து துறைகளுக்கும் நேரடியாகச் சென்று அத்துறை சார்ந்தும், அத்துறை சார்ந்த பிற படிப்புகளில் உள்ள வேலைவாய்ப்பு நிலைகளையும் கேட்டறிந்தனர். இந்நிகழ்விற்கு, முனைவர் கா.ரமேக்ஷ்குமார் (உதவிப்பேராசிரியர், விலங்கியல்துறை, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரையும், செல்வன் தி.வெங்கடேசன் (மூன்றாமாண்டு இளங்கலை வணிகவியல் கணினிப்பயன்பாடு) மற்றும் செல்வன் வெற்றிவேல் (மூன்றாமாண்டு இளநிலை வேதியியல்) பயிலும் மாணவர்கள் தங்களுடைய கல்லூரி மற்றும் இதர செயல்பாட்டு அனுபவ உரையினையினையும் வழங்கினர். இந்நிகழ்விற்கு, முனைவர் க.ராஜ்குமார் (உதவிப்பேராசிரியர், வேதியியல்துறை மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரையும், முனைவர் அ.சதிக்ஷ்பாபு (அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர்) தொகுப்புரையும் வழங்கினர்.

Tags

Next Story
ai in future agriculture