வாடிப்பட்டி அருகே தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்
வாடிப்பட்டி அருகே நடந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்.
தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்
மதுரை மாவட்டம், சாணாம்பட்டியில், கல்லடிப்பட்டி தொழிலாளர் முன்னணி தொழிற்சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். சங்கப்பொதுச் செயலாளர் அழகர்சாமி வரவேற்றார்.
சங்க ஒருங்கிணைப்பாளர் ராம் பாபு சங்கத்தின் செயல்பாடு தொழிலாளர்கள் ஒற்றுமை தொழில் பாதுகாப்புபற்றி விளக்கி பேசினார். உழைக்கும் மக்கள்மாமன்ற தலைவர் குசேலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புதிய தொழில் மாற்றங்களுக்கு ஏற்றவாறுநாம் மாற வேண்டும் வாழ்க்கையில் எந்தவிததவறு களும் செய்யாமல் பிள்ளைகளை நல்ல படிப்பு படிக்க வைத்து சமூகத்தில் மதிப்பு பெறும் வகையில் தீய பழக்கங்களை விட்டுவிட்டு மனைவி,மக்கள் தொழிலகம் மீது பாசத்துடன் நன்றியுடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில்,சங்கப் பொருளாளர் மதுரை வீரபாண்டியன் நன்றிகூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu