மதுரை அருகே போலி பீடி தயாரித்து விற்றவர் கைது

மதுரை அருகே போலி பீடி தயாரித்து விற்றவர் கைது
X

மதுரை அருகே அலங்காநல்லூரில், போலி பீடி பண்டல்கள் பறிமுதல்.

பல்வேறு நிறுவனங்களில் பெயரில் போலியாக தயாரித்த பொருட்களை கைப்பற்றி ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மதுரையில் பிரபல பீடி நிறுவனங்களின் பெயரில் போலியாக பீடி தயாரித்து விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்த பண்டல்கள், பண்டலாக போலி பீடிகள் பறிமுதல் செய்தனர்.

மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு, சிக்கந்தர் சாவடி பகுதிகளில் பிரபல செய்யது பீடி, நிறுவனத்தின் பெயரில், போலியாக லேபில், பீடி தயாரித்து குறைந்த விலையில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக செய்யது பீடி நிறுவன மேலாளர் முகம்மது அப்துல்லா, அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கடைகளில் போலி பீடி பண்டல்களை விற்பனை செய்யவந்த நபரை செய்யது பீடி நிறுவன ஊழியர்கள் மடக்கிபிடித்து அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலி பீடி பண்டல்களை விற்பனை செய்தது

பிடிபட்ட நபர் மதுரை ஆனையூரை பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து பண்டல் பண்டலாக பீடிகள், டி.எஸ். பட்டணம் பொடி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பெயரில் போலியாக தயாரித்த பொருட்களை கைப்பற்றி ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!