/* */

சோழவந்தான் அருகே, அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்

சோழவந்தான் அருகே, அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் பிரச்சாரம் செய்தார்

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே, அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்
X

வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் கச்சிராயிருப்பு.பகுதியில் ஆர்பி உதயகுமார் தேர்தல் பிரச்சாரம்:

சோழவந்தான்:

தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டிநாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம், முள்ளி பள்ளம் மற்றும் கச்சிராயிருப்பு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முள்ளி பள்ளம் பகுதிக்கு வந்த முன்னாள் அமைச்சருக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கு கூடி இருந்த பொது மக்களிடம் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், அம்மா பேரவை துரை தன்ராஜ், வெற்றிவேல், மகேந்திர பாண்டி, வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கப்பாண்டி, தென்கரை ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு, விஜய் பாபு, தண்டபாணி பெருமாள், ஜெயபிரகாஷ் துரைக்கண்ணன், பேட்டை ராஜா, மாரி குருவித்துறை, வழக்கறிஞர் காசிநாதன், முள்ளிப்பள்ளம் கிளைச்செயலாளர் சேது மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் அதிமுகவினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமாருக்குஅவை தலைவர் முனியாண்டி தலைமையில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Updated On: 11 April 2024 7:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?