மதுரை அருகே விபத்தில் கட்டிடத் தொழிலாளி உயிரிழப்பு

மதுரை அருகே விபத்தில் கட்டிடத் தொழிலாளி உயிரிழப்பு
X

விபத்தில் இறந்த கட்டிடத் தொழிலாளி.

மதுரை அருகே விபத்தில் கட்டிடத் தொழிலாளி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வீரய்யா. இவரது மகன் காசிராஜன் (வயது 25). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், சமயநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் சென்ட்ரிங் வேலை காரணமாக சென்று பார்த்துவிட்டு, தேனூர் வழியாக மேலக்காலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தேனூரில் ஒரு திருப்பத்தில் உள்ள அரசு மதுபான கடை எதிரில் இருந்த டிரான்ஸ்பார்மர் இழுவை கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தவறி விழுந்த காசிராஜன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future education