அலங்காநல்லூரில் 9வது கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு

அலங்காநல்லூரில்  9வது கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு
X

அலங்காநல்லூரில் கரும்பு விவசாய சங்க 9-வது மாநாடு நடைபெற்றது.

Farmers Association - மதுரையை அடுத்த அலங்காநல்லூரில் 9வது கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு நடைபெற்றது.

Farmers Association - மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 9 -வது மாநாடு நடந்தது. இதற்கு மாநிலத் தலைவர் வக்கீல் பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர்கள் கதிரேசன், இளங்கோவன், நிர்வாகி மொக்கைமாயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சரம்பேட்டை போஸ் வரவேற்றார். கூட்டத்தில், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை 2022- 2023-ல் இந்த வருடமே கரும்பு ஆலையை தொடங்க வேண்டும். கரும்பு வெட்டு கூலியை ஆலை நிர்வாகமே விவசாயிகள் நலன் கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும். மாநில அரசின் பரிந்துரை விலைப்படி டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும், ஆலை திறக்கப்படும் என அறிவித்த, தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்க நிர்வாகிகள் கருப்பையா,அய்யாக் காளை உள்ளிட்ட அலங்காநல்லூர், மேலூர், உசிலம்பட்டி மற்றும் அருப்புக்கோட்டை பகுதிகளில் இருந்து கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தாலுகா செயலாளர் ஸ்டாலின் குமார் நன்றி கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!