மதுரை அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷமருந்தி தற்கொலை

மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அய்யனார் (பழைய படம்)
Latest Suicide News -மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது40). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (38). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உண்டு.மூத்த மகன் ஹரிகிருஷ்ணன் (14) அருகிலுள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பும், இரண்டாவது குபேந்திரகிருஷ்ணன் (12) அங்குள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது.
இதைத்தொடர்ந்து , வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி நேற்று இரவு கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது இரு மகன்களான ஹரி கிருஷ்ணனுக்கும், குபேந்திர கிருஷ்ணனுக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து இருக்கிறார். தாய் வழக்கம் போல் தங்களுக்கு தரும் உணவு தானே என நினைத்து இரு குழந்தைகளும் தாங்கள் பிணமாக போகிறோம் என்றதை அறியாமல் ஆவலாக வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.
விஷம் கலந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஹரி கிருஷ்ணனும், குபேந்திர கிருஷ்ணனும் தாயின் மடியில் மயங்கி சாய்ந்தனர். தான் பெற்ற குழந்தைகளை தன் கையாலே விஷம் குடித்து துடிக்க துடிக்க கொன்று விட்டோமே என தனலட்சுமி கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் ஏற்கனவே தயாராக வைத்திருந்த விஷம் கலந்த உணவை தானும் சாப்பிட்டார். விஷம் கலந்த உணவு வயிற்றிற்குள் சென்றதும் தனலட்சுமி மயங்கி விழுந்து உயிரை மாய்த்தார்.
அன்பு மனைவியும், ௨ குழந்தைகளும் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார்கள் என்பதை அறியாத அய்யனார் நள்ளிரவில் வீட்டிற்கு வந்து கதவை தட்டினார். ஆனால் யாரும் வந்து கதவை திறக்கவில்லை. இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் மூன்று பேரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
சிறிது நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அய்யனார் பின்னர் தனலட்சுமி மீதம் வைத்து இருந்த விஷத்தை தானும் அருந்த தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவரும் மயங்கி விழுந்து கிடந்தார்.இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்3 பேரின் பிரேதங்களையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அய்யனாரை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu