அலங்காநல்லூர் அருகே கிணற்றிலிருந்து 3 சடலம் மீட்பு: ஒருவர்மருத்துவமனையில் அனுமதி

அலங்காநல்லூர் அருகே கிணற்றிலிருந்து 3 சடலம் மீட்பு: ஒருவர்மருத்துவமனையில் அனுமதி
X

முருகன் மற்றும் அவரது  மனைவி சுரேகா

கடன் பிரச்னையால் மனம் வெறுத்துப்போன முருகன், தனது மனைவி உள்பட இரு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டுள்ளார்

அலங்காநல்லூர் அருகே பிளஸ் 1 மாணவி , தாய், மகன் உள்பட 3 பேர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தனர். ஒருவர் மருத்து மனையில் அனுமதிக்கப்பட்டார்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளத்தை சேர்ந்த முருகன்( 39 ). இவர், குலமங்கலம் அருகே பொம்ம தேவன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், கொய்யா மரம் குத்தகைக்கு எடுத்து அங்கு குடும்பத்துடன் தங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஊரில் கடன் ஏற்பட்டதால் கொய்யா குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து கடனை அடைத்துவிடலாம் என இருந்த போது, அங்கும் கடன் அதிகமானதால் மனைவி சுரேகா( 36.), மகள் யோகிதா( 16.) இவர் மதுரையில் பிளஸ்- 1 படித்து வருகிறார். மகன் மோகனன்( 11.) இவர் ,பாலமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தொடர்ந்து, கடன் பிரச்னையால் மனம் வெறுத்துப்போன முருகன் , தனது மனைவி உள்பட இரு குழந்தைகளையும் பொம்மதேவனுக்கு சொந்தமான கிணற்றில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.



அவர்கள் மூவரும் உயிரிழந்த நிலையில் முருகன் மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ,மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இறந்த 3 பேரையும் அலங்காநல்லூர் போலீசார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்ப வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள். மேலும், கடன் பிரச்னையாக. இல்லை வேறு பிரச்னையா என்பது தெரியவரும் இச்சம்பவம் கள்ளி வேலி பட்டி மற்றும் பெரிய இலந்தைகுளம் கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தியது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!