5 லட்சம் கடனுக்கு 12 லட்சம் கந்துவட்டி வசூலித்து சித்ரவதை: போலீஸார் விசாரணை

5 லட்சம் கடனுக்கு 12 லட்சம் கந்துவட்டி வசூலித்து  சித்ரவதை: போலீஸார் விசாரணை
X
கந்துவட்டி சித்ரவதை தாங்காமல் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவத்தை போலீஸார் விசாரிக்கின்றனர்

5 லட்சம் கடனுக்கு 12 லட்சம் கந்துவட்டி வசூலித்து சித்ரவதை: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

மதுரையில் ஜந்து லட்சம் கடனுக்கு 12 லட்சம் வரை வசூலித்து கந்து வட்டி கேட்டு மிரட்டியதால், வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம் ஆர்.வி.பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாண்டியராஜன்( 33 ) இவர் கிருஷ்ணன் பழனி என்பவரிடம் 2011 -ஆம் ஆண்டு ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனுக்கு ரூபாய் பதிமூன்று லட்சம் வரை திருப்பி செலுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கூடுதலாக வட்டி கேட்டு கிருஷ்ணன்பழனியும் அழகர் என்பவரும் பாண்டியராஜனை ஆபாசமாகப் பேசி மிரட்டியுள்ளனர் .

இதனால், மனமுடைந்த பாண்டியராஜன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு , அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாண்டியராஜன் அளித்த புகாரின்பேரில் திருநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையோர டாஸ்மாக் பார் பின்பகுதியில் வாளுடன் பதுங்கியிருந்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

மதுரை குருவிக்காரன் சாலையில், டாஸ்மாக் பார் பின்புறம் வாளுடன் பதுங்கி இருந்த இரண்டு சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அண்ணாநகர் சப்-இன்ஸ்பெக்டர் சுபா, போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, குருவிகாரன் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் பார் பின்புறமாக சிலர் போலீஸாரை கண்டதும் பதுங்குவது தெரியவந்தது . போலீசாருடன் பின்புறமாக சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார். அவர்களில், அண்ணா பஸ் ஸ்டாண்ட் சாத்தமங்கலம் குறுக்கு தெருவை சேர்ந்த சிவகுமார்(19.) மற்றும் சிம்மக்கல் எம.சி. காலனியைச் சேர்ந்த(17 ), சிம்மக்கல் அனுமார்கோவில் படித்துறையை சேர்ந்த மற்றொரு 17 வயது சிறுவன் மூன்று பேரும் கையில் வாளுடன் இருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று வாளையும் போலீஸர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

அவனியாபுரத்தில் மளிகை கடைக்கு சென்ற பெண்ணிடம் வம்பு செய்த வாலிபர் கைது

மதுரை அவனியாபுரத்தில் மளிகை கடைக்கு சென்ற இளம் பெண்ணை கையை பிடித்து இழுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் காவேரி நகர் 4-வது தெருவைச் சேர்ந்த 35 வயது பெண் . இவர்அதே பகுதியில், உள்ள ஒரு மளிகைக் கடைக்குச் சென்றார். அப்போது, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சண்முகவேல் மகன் செல்வமுருகன்( 21.) என்ற வாலிபர் அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வாலிபர் செல்வ முருகனை கைது செய்தனர்.

அவனியாபுரத்தில் அரிவாளால் வெட்டி பணம் செல்போன் பறிப்பு

விருதுநகர் கதலம்பட்டி தெருவை சேர்ந்தவர் அய்யனார்(48.). இவர் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கி அவர் வைத்திருந்த 7 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் அவரிடம் இருந்த முந்நூறு ரூபாயையும் பறித்துச் சென்றனர் . இது தொடர்பான புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் இருவரையும் தேடிவருகின்றனர்.

தெற்குவாசல் பகுதியில் முன்விரோதம் காரணமாக வாலிபரைத் தாக்கிய தந்தை மகன் உள்பட 3 பேர் கைது

மதுரை தெற்கு வெளி வீதி ஞானம்மாள் கோவில் தெற்கு சந்து பகுதியை சேர்ந்த குமார் மகன் கார்த்திகேயன்( 33 ) . இவருக்கும் கீரைத்துரை மேல தோப்புவை சேர்ந்த சித்திரவேல் மகன் ஜெயபால்( 47 ) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில், தெற்கு வாசல் எப்.எப். ரோடு பகுதியில் சென்றபோது, சித்திரவேல் அவருடைய மகன் ஜெயபால் மற்றும் கீரைத்துறையை சேர்ந்த செல்வம் மகன் ஹரிஹரசுதன்( 24 ) ஆகிய மூவரும் கார்த்திகேயனை பலமாக தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில், தெற்கு வாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை தாக்கிய தந்தை மகன் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!