மதுரை மாநகராட்சி அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம்
மதுரை மாநகராட்சி ஆணையரை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டுபோடும் போராட்டம் நடைபெற்றது
மதுரை மாநகராட்சி ஆணையரை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டுபோடும் போராட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை, தெற்குவாசல், கீழவாசல், அரசரடி , சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பாக, மதுரை மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வந்த சாலையோர கடைகளை நடைபாதைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டியும் மாநகராட்சி இடிக்கும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளால் சாலையோர ஏழை எளிய தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதரத்தை இழந்து தவிப்பதாகவும், மாநகராட்சி கடைகளை வைத்துள்ள தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தராமல், கடைகளை இடிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஏராளமானோர் ஊர்வலமாக வந்து மதுரை மாநகராட்சி அலுவலகத்தை பூட்டுபோடும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். மதுரை மாநகராட்சி நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்து தராமல், மனசாட்சியின்றி தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை சிதைத்து வருவதாகவும், முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu