மதுரை மாநகராட்சியில் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

மதுரை மாநகராட்சியில் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
X

இந்திய அரசியலமைப்பு நாள் உறுதி ஏற்றுக்கொண்ட மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள்

மதுரை மாநகராட்சியில் ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் இந்திய அரசமைப்பு நாள் உறுதி எடுத்துக் கொள்ளப்பட்டது

மதுரை மாநகராட்சியில் இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், இந்திய அரசமைப்பு உறுதிமொழி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்திய அரசமைப்பு உறுதிமொழி: இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச் சமுதாயமும், சமயச் சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை, வாய்ப்பு நலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும், தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும், உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்புப் பேரவையில் 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் என ஆணையாளர் வாசிக்க அனைவரும் வாசித்து உறுதி எடுத்துக் கொண்டனர்.

இதே போல், அந்தந்த மண்டல அலுவலங்களில் மண்டல உதவி ஆணையாளர்கள் முன்னிலையில், அனைத்து பணியாளர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் சங்கீதா, உதவி ஆணையாளர் (வருவாய்) ரெங்கராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!