மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்: ஆணையர் ஆய்வு

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்: ஆணையர் ஆய்வு
X

மதுரை மாநகராட்சி மண்டலம் 1க்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

மொத்தம் ரூ.77.55 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்

மதுரை மாநகராட்சி மண்டலம் 1க்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 -வது வார்டு எண்.3 சங்கீத் நகர் 1-வது தெருவில் ரூ.1.87 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுபால பணிகளையும், வார்டு எண்.3 மிளகரணை மந்தையம்மன் கோவில் தெருவில் ரூ.8.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், வார்டு எண்.3 அன்னை அபிராமி நகரில் ரூ.13.52 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செம்மண் சாலை பணியினையும், வார்டு எண்.3 ஆனையூரில் ரூ.36.82 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடம், ஆழ்துளை கிணறு மற்றும் பேவர் பிளாக் சாலை பணிகளையும், வார்டு எண்.5 வைகை தெருவில் ரூ.16.44 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினையும் என மொத்தம் ரூ.77.55 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, வார்டு எண்.3 சங்கீத் நகரில் பழுதடைந்த நிலையில் உள்ள பேருந்து நிழற்குடையினை அகற்றி புதிய பேருந்து நிழற்குடையினை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வில், உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளர்கள் முத்துராமலிங்கம், ஷர்புதீன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!