மதுரையில் தேசிய தடுப்பூசி தின பேரணி : மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைப்பு

மதுரையில் தேசிய தடுப்பூசி தின பேரணி : மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைப்பு
X

தேசிய தடுப்பூசி தின விழிப்புணர்வு பேரணியில் பங்கேர்ற மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர்

தேசிய தடுப்பூசி தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

தேசிய தடுப்பூசி தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (15.03.2022) மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். அனீஷ் சேகர், லெட்சுமி பெண்கள் முன்னேற்ற சங்கம் கோத்ரேஜ் கிவ் இந்தியா ஆகிய தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய தேசிய தடுப்பூசி தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்தியாவில் முதன் முதலாக 1995-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஆண்டுதோறும் மார்ச் 16-ஆம் நாள் தேசிய தடுப்பூசி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கொரோனா வைரஸ் பரவல் உள்ள சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அவர்கள் ஸ்வஸ்தி லெட்சுமி பெண்கள் முன்னேற்ற சங்கம் கோத்ரேஜ் கிவ் இந்தியா ஆகிய தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தினர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர், கொடியசைத்து துவக்கி வைத்த இப்பேரணியானது, காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாக தமுக்கம் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில், அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், ஸ்வஸ்தி மாநில திட்ட மேலாளர் ஜெயகணேஷ் , மாவட்ட திட்ட மேலாளர்பிரியா பாபு உட்பட அரசு அலுவலர்கள் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!