மதுரையில் எகிறிய மல்லிகை பூ விலை: அதிர்ச்சியில் வியாபாரிகள்

மதுரையில் எகிறிய மல்லிகை பூ விலை: அதிர்ச்சியில் வியாபாரிகள்
X
தீபாவளியை முன்னிட்டு, மதுரையில் மல்லிக்கை பூக்களின் விலை அதிகரித்ததால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில், மல்லிகைப்பூ விலை, கடந்த வாரம் கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அதன்படி, மல்லிகை கிலோ ஒன்றின் விலை இன்ரு 2000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது, வியாபாரிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் 5 டன் மல்லிகை மார்க்கெட்டிற்கு வந்த நிலையில், இந்த வாரம் வரத்து 2 டன் ஆக குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என்று, பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!