பாதுகாப்பின்றி ஏற்றிச்செல்லும் ஜல்லிக்கற்கள்..! தடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!

பாதுகாப்பின்றி  ஏற்றிச்செல்லும் ஜல்லிக்கற்கள்..! தடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!
X

எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் கற்களை ஏற்றிச் செல்லும் லாரி.

மதுரை அருகே ஆபத்தான நிலையில் கிரஷர் லாரிகள் இயக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான்:

வாடிப்பட்டி பகுதியில் ஆபத்தான நிலையில் கிரசர் வண்டிகள் இயக்கப்படுவதால் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, பாலமேடு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிரஷர் நிறுவனங்கள் அதாவது கல்குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில், இருந்து மணல் ஜல்லி, உடை கற்கள் போன்ற பொருட்களை ஏற்றி செல்லும் கிரசர் வண்டிகள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக ,வாடிப்பட்டி முதல் பாலமேடு வரை சாலை மிக மோசமாக உள்ள நிலையில் கிரசர் வண்டிகளுக்கு முன்னும் பின்னும் செல்லும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுளளது. ஜல்லி மணலின் துகள்கள் பிறப்பதால் கண்களில் விழுந்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜல்லி பௌடர் கொண்டுசெல்லும் முறையாக மூடி கொண்டுசெல்லவேண்டும். ஆனால் எந்த லாரிகளும் பாதுகாப்புடன் ஜல்லி மற்றும் ஜல்லி பௌடரை கொண்டுசெல்வதில்லை. பல நேரங்களில் சிறிய ஜல்லிகள் சாலையில் கொட்டிச் செல்வதும் உண்டு. ஒருவேளை பின்னால் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் என்னாவது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆகவே, பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலையில் கிரசர் வண்டிகள் செல்வதை தடுத்து நிறுத்தவேண்டும். ஆகையால் கிரசர்வண்டிகளை, போதிய பாதுகாப்புடன் இயக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் ,லாரிகள் சாலைகளில் செல்லும்போது ஜல்லி பௌடரை ஏற்றி செல்வதால், லாரியின் பின்னல் செல்வோர் மற்றும் காற்று வீசும் நேரங்களில் எல்லா திசைகளிலும் தூசி பார்ப்பதாகவும், பல நேரங்களில் வாகன ஓட்டிகளின் கண்களில் படுவதாகவும் கூறுகிறார்கள்.

அதனால், போதிய பாதுகாப்புடன் ஜல்லி கற்கள் மற்றும் ஜல்லி பௌடரை கொடு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அவர்களுக்கு வலியுறுத்தவேண்டும். விபத்து ஏற்பட்டபின்னர் விழிப்பதைவிட விபத்து வரும் முன் காப்பதே சிறந்ததாகும் அதிகாரிகள் என்ன செய்யப்போகிறார்கள்? பொறுத்திருந்து பாப்போம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!