மதுரையில் ,விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் வழங்கினார்

மதுரையில் ,விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர்  வழங்கினார்
X

தமிழக வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி.

விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

88 விவசாயிகளுக்கு ரூ.186.56 இலட்சம் மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் கூடிய பவர் டில்லர் இயந்திரங்கள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

மதுரை:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மை பொறியியல் துறை சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி 88 விவசாயிகளுக்கு ரூ.186.56 இலட்சம் மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் கூடிய பவர் டில்லர் இயந்திரங்களை வழங்கினார்.

தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் , விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பெருக்கும் நோக்கில் பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சிறு குறு விவசாயிகளின் தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதற்குத் தேவையான நீர் ஆதாரத்தினை உருவாக்குதற்கு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்ப் அமைக்கும் திட்டம், பண்ணைக் குட்டைகள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை தீர்வு மற்றும் விளைச்சலை பெருக்கும் விதமாக வேளாண்மைப் பொறியியல் துறை வாயிலாக வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மகளிர் அல்லது சிறு, குறு அல்லது ஆதி திராவிட விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 50 மற்றும் பெரிய விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ,மாநில அளவில் 5000 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் வழங்கும் திட்டம் 04.09.2023 காலை சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் ரூ.186.56 இலட்சம் மதிப்பீட்டில் 88 பவர் டில்லர்கள் ரூ.74.80 இலட்சம் மதிப்பு அரசு மானியத்தில் 88 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான இந்த அரசு எப்போதும் உழவர்களின் உற்ற தோழனாக செயல்படும் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தெரிவித்தார்.

இந்த விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , துணை மேயர் தி.நாகராஜன் , வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்முரேஷ் குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!