மேலூர் அருகே கோயிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பித்தளை பொருட்கள் திருட்டு

மேலூர் அருகே கோயிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பித்தளை பொருட்கள் திருட்டு
X

திருட்டு நடைபெற்ற மேலூர் யூனியன் ஸ்டாப் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் 

மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்ததுடன், தடயங்களையும் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மதுரை அருகே மேலூரில் கோயிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலை மற்றும் 120 கிலோ பித்தளை பொருட்கள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், மேலூர் யூனியன் ஸ்டாப் அருகே முத்துமாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில், கீழ் பகுதியில் அன்னதானக்கூடமும், உற்சவ காலங்களில் பயன்படுத்தக்கூடிய பூஜை பொருட்கள் மற்றும் சுவாமி விக்கிரகங்கள் வைத்திருக்கக்கூடிய பாதுகாப்பு அறையும் உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் திருக்கோவிலில் கீழ் உள்ள அன்னதானகூட அறையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் அங்கிருந்த பாதுகாப்பு அறையை உடைத்து அதில் இருந்த 120 கிலோ எடையுள்ள பித்தளையிலான பூஜை பொருட்களையும், மற்றும் பித்தளையிலான தெய்வானை சிலையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்த மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்ததுடன், தடயங்களையும் சேகரித்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!