பொதுமக்கள் சேவைக்காக சிறப்பு அலுவலகம் திறக்கப்படுமென அதிமுக வாக்குறுதி

பொதுமக்கள் சேவைக்காக சிறப்பு அலுவலகம் திறக்கப்படுமென  அதிமுக வாக்குறுதி
X

வாக்கு சேகரித்த அதிமுக 37-வது வேட்பாளர் முனைவர் கல்பனா கண்ணன்

இலவச தொலைபேசி கூடிய 24 மணி நேர சேவை மையம் செயல்படும் 37-வது அதிமுக வேட்பாளர் கல்பனா கண்ணன் தெரிவித்தார்

பொது மக்கள் நலனுக்காக, இலவச சேவை மையம் திறக்கப்படும் என அதிமுக வேட்பாளர் உறுதியளித்தார்.

24 மணி நேரமும் மக்களின் தேவைக்காக சேவை மையம், இலவச தொலைபேசி எண்ணுடன் கூடிய அலுவலகம் செயல்படும் என, அதிமுக 37-வது வேட்பாளர் முனைவர் கல்பனா கண்ணன் தெரிவித்தார்.மதுரையில், சித்திவிநாயகர் கோயில் தெரு, யாணைக்குழாய் பகுதிகளில், வாக்காளர்களிடம், இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்களிடம் அவர் கூறியதாவது: மகளிர்க்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், சுயவேலை வாய்ப்பு பயிற்சிகள் மற்றும் ஆலோசணைகள், கழிவு நீர் தேக்கம் இல்லாமல், பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும் என்றார்.இந்த பிரச்சாரத்தில், அதிமுக நிர்வாகி ரியாஸ், பிரதிநிதி கார்வேந்தன் மற்றும் வார்டு கழக நிர்வாகிகள், இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தனர்.

Tags

Next Story