மதுரை-பசிச்சா உணவு-நீங்களே எடுத்துக்கோங்க -காங்கிரஸ் இளைஞர்கள் முயற்சி

மதுரை-பசிச்சா உணவு-நீங்களே எடுத்துக்கோங்க -காங்கிரஸ் இளைஞர்கள் முயற்சி
X
திருப்பரங்குன்றம் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் இணைந்து உணவு எடுத்துக்கொள்ளுங்கள் என்று உணவு பொட்டலங்கல் வழங்கி வருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் இணைந்து அந்த பகுதியில் பசித்தால் உணவு எடுத்துக்கொள்ளுங்கள் என்று தினமும் 400 உணவு பொட்டலங்கல் வழங்கி வருகின்றனர். அப்பகுதியில் பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் பகுதியில் 3 இடங்களில் ஏற்பாடு செய்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் 5 வது பஸ் நிறுத்தம் அருகே மதியம் மற்றும் இரவு நேரங்களில் உணவு இல்லாதவர்களுக்கு உணவு வைக்கப்படுகிறது,அதனை ஏழை, எளியோர் மற்றும் அதரவற்றோர் உணவு பார்சல் எடுத்துச் செல்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறை மாநில பொதுசெயலாள் ஜெராடு சத்தியன் சிவன் ஒன்று சேர்ந்து இளைஞர்கள் சாப்பாடு உணவுகளை தயார் செய்து தினமும் தக்காளி சாதம், புளியோதரை,பிரியாணி போன்ற உணவுகளை தயார் செய்து வைக்கின்றனர். தற்போது கொரானா இரண்டாவது அலை காரணமாக சாலைகளில் உணவின்றி தவிக்கும் ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றோர், ஆகியோருக்காக உணவு தயார்செய்து மதியம் மற்றும் இரவு நேரங்களில் தினமும் 400 பேருக்கு உணவு பொட்டலங்கள் வைக்கப்படுகின்றன.

மேலும் இதனை தொடர்ந்து திருநகர், தனக்கன் குளம் மொட்ட மலை, திருப்பரங்குன்றம் பழங்குடி நகர் பகுதிகளில் சாப்பாடு பொட்டலங்கள் வைக்கப்படுகின்றன. அதனை கொராண காலங்களில் உணவு கிடைக்காதவர்கள் எடுத்துச் செல்லும் வகையில் சாலையோரத்தில் வைக்கப்பட்டு ஆதரவற்றோர் மற்றும் முதியோர் சாப்பாடு பார்சல் எடுத்துச் செல்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!