மதுரை நகரில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது: பாட்டில்கள் பறிமுதல்

மதுரை நகரில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது: பாட்டில்கள் பறிமுதல்
X
மதுரை நகரில் மதுபான பாட்டில்கள் விற்றவரை கைது செய்து அவரிடமிருந்து 60 பாட்டில்களை போலீசார் பறிமுதுல் செய்தனர்.

மதுரை எஸ். எஸ். காலனி காவல் எல்லைக்குட்பட்ட பொன்மேனி மெயின் ரோடு அம்பேத்கர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் வைத்து , மதுபானங்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் வந்தது தகவலின் படி, எஸ் .எஸ் .காலனி காவல் ஆய்வாளர் உத்தரவின்படி, தனிப் படை தலைமைக் காவலர் சரவணகுமார் சென்று பார்த்தபோது , கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

மது விற்பனை செய்த பிரபு ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கரி மேட்டில் உள்ள அரசு மதுபானக் கடை பாரில் பணி புரிந்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது . இவரிடமிருந்து, 180 மி.லி.கொள்ளளவு கொண்ட 78 எண்ண ம் மது பாட்டில்களை பறிமுதல் செய்து பிரபுவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!