பிராணிகளுக்கு வரியா? மதுரையில் நாட்டுமாடு நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பிராணிகளுக்கு வரியா? மதுரையில் நாட்டுமாடு நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு வரிவிதிக்கும் உத்தரவை திரும்பப்பெறக்கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பாக, மாட்டு நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிராணிகளுக்கு, மதுரை மாநகராட்சி வரி விதிக்க ஆட்சேபம் தெரிவித்து, நாட்டுமாடு நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில், நாட்டு மாடு நலச்சங்கத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ,சோழவந்தானில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கும், கடையநல்லூரில் கிடா முட்டு நடத்தியதற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, அந்த சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, நாட்டு மாடுகளை பாதுகாக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்ற மதுரை மாநகராட்சியின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!