மதுரையில் குடோனில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

மதுரையில்  குடோனில் ஏற்பட்ட தீயை  கட்டுப்படுத்த  தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
X
தீ விபத்து காரணமாக விரகனூர் தொடங்கி தெப்பக்குளம் வரை வானம் முழுவதிலும் கரும்புகை மண்டலமாக மாறியது

மதுரையில் ப்ளாஸ்டிக் குடோனில் தீ விபத்தால், புகை மண்டலமாக காட்சியளித்த வானம் - தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டு வருகின்றனர்:

மதுரை மாவட்டம், விரகனூர் அருகேயுள்ள கோழிமேடு பகுதியில் ஏராளமான ப்ளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு குடோன்கள் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று மாலை அதே பகுதியில் செயல்பட்டுவந்த ரமேஷ் மற்றும் அண்ணாதுரை ஆகியோருக்கு சொந்தமான ப்ளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு குடோனின் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் ,குடோனில் வைக்கப்பட்டிருந்த அனைத்து ப்ளாஸ்டிக் கழிவுகளும் மலமலவென எரியத்தொடங்கியது. இதனால், கரும்புகை மண்டலம் உருவாகியது. இந்நிலையில் ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை தண்ணீர் மற்றும் நுரையை பயன்படுத்தி தீயை அணைத்துவருகின்றனர்.

ப்ளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விரகனூர் தொடங்கி தெப்பக்குளம் வரை வானம் முழுவதிலும் கரும்புகை எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ப்ளாஸ்டிக் குடோன்கள் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா, என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!